Vaiko returned home from the hospital

கடந்த மே மாதம் 25ஆம் தேதி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ திருநெல்வேலி வருகை தந்த போது எதிர்பாரா விதமாக இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதனையடுத்து, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது குணமடைந்து வந்தார்.

இதற்கிடையில், மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்கு பின் வைகோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இதனைத்தொடர்ந்து, 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று (02-06-24) மாலை வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வைகோ, இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.