police encountered man who was constantly misbehaving with women

உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் மனோஜ் என்கிற உத்தம். இவர் வீட்டில் தனியாக இருக்கும் பெண்களைக் குறி வைத்து துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். இவரால் பல பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உத்தம் மீது போலீசாருக்கு தொடர்ந்துபுகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளது. தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்த நிலையில் மனோஜ் என்கிற உத்தம் மதுராவில் உள்ள ஒரு இடத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடத்துள்ளது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உத்தமை சுற்றிவளைத்து கைது செய்ய முயன்றுள்ளனர். அப்போது தான் மறைத்து வைத்திருந்த கை துப்பாகியை எடுத்து உத்தம் போலீசாரை நோக்கி சுட்டுள்ளார்.

இதையடுத்து போலீசார் தற்காப்புக்காக உத்தமை நோக்கிச் சுட்டுள்ளனர். இதில் உத்தம் உடலில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின் உத்தம் உடலைக் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், குற்றவாளி பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி, குண்டுகள், இருசக்கர வானங்கள் ஆகியவற்றைபறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் உத்தமால் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளான பெண்கள் போலீசார் செய்த என்கவுண்டரை வரவேற்றுள்ளனர்.