Collector reprimands Municipal Commissioner for not carrying out cleaning work

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் மழைக்கால நோய்களை தடுக்கும் பொருட்டு இப்போதே நோய் பரவல் தடுக்கும் பணியை தொடங்கச் சொல்லி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது. திருப்பத்தூர் நகர சுற்றுவட்டார பகுதிகளில் மழைக்காலத்தையொட்டி டெங்கு பரவல் தடுக்கும் விதமாக தூய்மைப்படுத்தும் பணி எந்தளவுக்கு நடந்துள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் தீடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் கால்வாய்களை முறையாக தூய்மைப்படுத்தாமல் மற்றும் குப்பை கழிவுகளை அப்புறப்படுத்தாமல் நோய் தொற்று ஏற்படும் வகையில் இருப்பதைப் பார்த்து நகராட்சி ஆணையாளரை கடுமையாக கண்டித்தார்.

பின்னர் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆதியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பஞ்சனம்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பழைய இரும்புக்கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மழைநீர் பிளாஸ்டிக் மற்றும் தகரம் உள்ளிட்ட பொருட்களில் மழைநீர் தேங்கி உள்ளதை மற்றும் சுகாதார சீர்கேடு விளைவிக்கும் வகையில் இருப்பதைப் பார்த்து இரும்பு கடையின் உரிமையாளரை கடுமையாக எச்சரித்து உடனடியாக தூய்மைப்படுத்த உத்தரவு விடுத்தார்.