Skip to main content

“இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது..” - கமல்ஹாசன்

Published on 02/06/2024 | Edited on 02/06/2024
Kamal Haasan question Why shouldn't the day come when Tamils ​​rule India

கமல் - ஷங்கர் கூட்டணியில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் இந்தியன் 2. இப்படம் இந்தியன் 3 ஆகவும் இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. முன்னதாக படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைபட்டுப் போனது. பின்னர் மீண்டும் படப்பிடிப்பு நடந்து வந்தது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் விவேக், மனோ பாலா, நெடுமுடி வேணு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் இப்போது மறைந்து விட்டனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியன் 2 படத்திற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாகப் பேசப்படுகிறது. இப்படத்தின் முன்னோட்ட வீடியோ ஒன்று கடந்த ஆண்டு நவம்பரில் வெளியானது.

மேலும் இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஜூன் மாதம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின்பு ஜூலை 12ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதனால் படத்தின் புரொமோஷன் பணிகளில் ஷங்கரும் கமல்ஹாசனும் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து இப்படத்தின் முதல் பாடல் ‘பாரா’, இரண்டாம் பாடலாக ‘நீலோற்பம்’ உள்ளிட்ட பாடல்கள், லிரிக் வீடியோவுடன் சமீபத்தில் வெளியனது.

இந்த நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய கமல்ஹாசன், “சிக்கலில் மாட்டி இந்தியன் 2 திரைப்படம் இரண்டு, மூன்று வருடங்களாக நகராமல் இருந்தபோது, அமைச்சர் உதயநிதி உதவியால் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தது. எங்களுக்கு உறுதுணையாக இருந்த உதயநிதிக்கு மக்கள் வேறு பொறுப்பு கொடுத்திருக்கிறார்கள்; அந்த பொறுப்பில் அவர் வெற்றிபெற வேண்டும். அவங்களுக்கு அவர் உறுதுணையாக இருந்ததுபோல், அவரோடு நாங்களும் உறுதுணையாக நிற்க வேண்டிய சூழல் வரும்.

நான் தமிழன், இந்தியன். இந்தியாவை தமிழன் ஆளும் நாள் ஏன் வரக்கூடாது. இதையும் செய்து காட்டுவோம். என்னை போன்ற பகுத்தறிவுவாதிகளுக்கு கடவுள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் மனிதர்கள் இல்லாமல் இருக்க முடியாது. அன்புதான் உசத்தி. எனக்கு தற்பெருமை பிடிக்காது. தற்படம்(செல்ஃபி) எடுப்பதும் பிடிக்காது” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியன் தாத்தாவின் அடுத்த புகைப்படமும் வெளியிடப்பட்டது.

சார்ந்த செய்திகள்

Next Story

‘இந்தியன் 3 பட ட்ரெய்லர் எப்போது வரும்?’ - ஷங்கர் தகவல்

Published on 11/07/2024 | Edited on 11/07/2024
Shankar informs When is Indian 3 trailer coming?

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. இப்படம், இந்தியன் 3 அதாவது மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகமான இந்தியன் 2 படம், 28 ஆண்டுகளுக்குப் பிறகு, நாளை (12-07-24) திரைக்கு வரவிருக்கிறது. 

இதற்கிடையில்,  இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் படக்குழு வேகமாக செய்து வருகிறது. அந்த வகையில், சென்னை, மும்பை என சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

அந்த வகையில், இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசன், சித்தார்த் ஆகியோர் கொச்சிக்கு சென்று, பத்திரிகையாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது பத்திரிகையாளர் ஒருவர், இந்தியன் 3 படம் எப்போது ரிலீஸ் செய்யப்படும் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஷங்கர், “எல்லாம் சரியாக நடந்தால், ஆறு மாதங்களுக்குள் இந்தியன் 3 படம் வெளிவரும். ஒருவேளை வி எஃப் எக்ஸ் வேலைகள் முடிந்தால், அது சாத்தியமாகும். நான் இன்னும் ஒரு தகவலை கொடுக்க விரும்புகிறேன். ‘இந்தியன் 2’ படத்தின் இறுதியில் ‘இந்தியன் 3’ படத்தின் ட்ரெய்லரைப் பார்க்கலாம்” என்று கூறினார். 

Next Story

‘அடுத்த 3 படங்கள்’ - ஷங்கர் கொடுத்த அப்டேட்!

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
Shankar's update his Next 3 films

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் இந்தியன் 2. கடந்த 1996ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம், 28 ஆண்டுகளுக்கு பிறகு வருகிற ஜூலை 12ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படம், இந்தியன் 3 ஆகவும் மூன்றாம் பாகமாகவும் வெளியாகவுள்ளது. லைகா நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படத்தில் காஜல் அகர்வால், விவேக், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, பிரியா பவானி சங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தியன் 2 படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் புரோமோஷன் வேலைகளில் கமல் உள்ளிட்ட படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், சென்னை, மும்பை என உலகமெங்கும் சில இடங்களில் இந்தியன் 2 படக்குழு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்து வருகின்றனர். 

அந்த வகையில், இயக்குநர் ஷங்கர் ஒரு நேர்காணலில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்த போது, தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் தொடர்பான விவரத்தை தெரிவித்தார். அடுத்த தலைமுறைக்கு என்ன மாதிரியான படங்களை நீங்கள் கொடுக்க விரும்புகிறீர்கள் என்று ரசிகர் ஒருவர், ஷங்கரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், “எனக்கு நிறைய ஐடியாக்கள் இருக்கிறது. தற்போது எனக்கு 3 ஐடியாக்கள் உள்ளன. ஒன்று வரலாற்று சிறப்புமிக்க ஒரு திரைப்படம். மற்றொன்று, ஜேம்ஸ் பாண்ட் பாணியில் ஒரு படம். மற்றொன்று 2012 திரைப்பட பாணியில் ஒரு சை ஃபை திரைப்படம். இது தான் என்னுடைய பிளான். இந்த மூன்று வகையான திரைப்படங்களும் மிகப் பெரிய பட்ஜெட் கொண்டது. அனைத்து கதைகளும் மிகப்பெரிய பட்ஜெட்டையும், நிறைய விஎஃப்எக்ஸ் காட்சிகளை கேட்கிறது. இந்த படங்களில் எல்லாம் உலகில் உள்ள அனைத்து புதிய தொழில்நுட்பத்தையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளேன்” எனக் கூறினார்.