IT audit at pharmaceutical company owner's home

Advertisment

சென்னையில் இன்றுபல இடங்களில்வருமானவரி மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை கேகே நகர் 80-வது தெரு ரமணியம் அடுக்குமாடி குடியிருப்பில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் சென்னை யானைக்கவுனியில் லால் என்பவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கவர்லால் கம்பெனி என்ற மருந்து தயாரிப்பு நிறுவன உரிமையாளரான லாலின் வீடுகளில், அலுவலகங்களில் சோதனையானது நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு லாலின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.