Friendly praise dog and cow

நாய் குட்டிக்கு பால் கொடுக்கும் ஆடுகள்.. பூனையும் நாயும் நண்பர்கள் இதெல்லாம் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகளில் சாத்தியம். ஆனால் தெருவில் சுற்றும் பசுவும் நாயும் இரவில் தங்கும் இடத்தில் நண்பர்களாகி இருவரும் கொஞ்சிக் கொள்வதை காண முடிந்தது.

Advertisment

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை வளாகத்தில் சுற்றும் சில பசுக்கள் அங்கு கொட்டப்படும் உணவுகளை தின்று வாழ்கிறது. இரவில் அதே வளாகத்தில் படுத்துக்கொள்கிறது. அதே போல நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் கொட்டும் உணவை திங்க ஏராளமான நாய்களும் உள்ளே சுற்றி வருகிறது. உணவு உண்ணும் நேரத்தில் பசுவும் நாயும் முறைத்துக் கொண்டாலும் மற்ற நேரங்களில் இவர்கள் நண்பர்களாக உள்ளனர்.

Advertisment

இரவில் ஒரே இடத்தில் படுத்துக் கொள்ளும் நாயும் பசுவும் கொஞ்சி விளையாடுவதை காணமுடிகிறது. பசு தனது நாக்கால் நாய் முகத்தில் வருடிக் கொடுப்பதும் நாய் தனது நாக்காலும் காலாலும் பசு முகத்தில் வருடிக் கொடுத்து கொஞ்சி விளையாடுவதும் காண்போரை கவர்ந்து இழுக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.