Skip to main content

தேவர் குருபூஜை;போலீஸ் எச்சரிக்கை

Published on 12/10/2017 | Edited on 12/10/2017

தேவர் குருபூஜை;போலீஸ் எச்சரிக்கை

வருகின்ற 28,29,30.10.17 ஆகிய தேதிகளில் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடைபெற உள்ளது. பசும் பொன் முத்துராமலிங்கம் தேவர் குருபூஜை முன்னிட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறையினர் விதித்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ்மீனா உத்தரவின் பேரில் கீழக்கரை உட்கோட்ட காவல்நிலையம் சார்பாக இன்று வாகன ஓட்டுநர்கள்,மைக்செட் உரிமையாளர்கள்,ப்ளக்ஸ் டிசைனர் உரிமையாளர்கள் ஆகியோர்களை அழைத்து கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் கீழக்கரை, ஏர்வாடி,சாயல்குடி,உத்திரகோசமங்கை, திருப்புல்லாணி ஆகிய பகுதிகளை சேர்ந்த ப்ளக்ஸ் டிசைனர்கள்,மைக்செட் உரிமையாளர்கள்,வாகன ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.

இதில் கீழக்கரை டி.எஸ்.பி பாலாஜி ஜாதி ரீதியான பாடல்களை ஒலிப்பது,வாடகை கார் மற்றும் வேன் ஆகியவற்றிற்க்கு அனுமதி கிடையாது,சொந்த வாகனம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி அதுவும் டி.எஸ்.பி அலுவலகத்தில் யார் யார் குருபூஜை செல்கிறார்களோ அவர்களுடைய முழுமுகவரியை அளித்தபின் அவர்களுக்கு டி.எஸ்.பி அலுவலகத்தில் வாகனத்திற்கான பாஸ் வழங்கப்படும்.  இதை தவறாக பயன்படுத்த கூடாது இதேபோல் இம்மானுவேல் சேகரன் குருபூஜையில் வாகன பாஸை தவறாக பயன்படுத்திய 280 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

தேபோல் ப்ளக்ஸ் போர்டுகளில்  தலைவர்கள் புகைப்படங்கள்,வன்முறையை தூண்டும் வாசகங்கள் இருந்தால் ப்ளக்ஸ் டிசைனர்கள் கைது செய்யப்படுவார்கள். இதுபோல் வாடிபட்டி மேளம் அடிக்ககூடாது. இந்த மேளத்தினால் செவித்திறன் பாதிப்படைகிறது. இதுபோன்ற பல்வேறு கட்டுப்பாடுகளை காவல்துறை விதித்துள்ளது. மேலும் இதில் கீழக்கரை இன்ஸ்பெக்டர் திலகவதி,மற்றும் எஸ்.ஐகள் வசந்தகுமார்,பூமுத்து,பாதம்ப்ரியா,பிரகாஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

- பாலாஜி

சார்ந்த செய்திகள்