Published on 02/03/2019 | Edited on 02/03/2019

அண்மையில் நடிகை ஹன்சிகா நடித்துள்ள மஹா படத்தில் காவி உடை அணிந்து புகைபிடிப்பது போன்ற போஸ்டர் வெளியாகியது. அந்த போஸ்டர் இந்து மத உணர்வுகளை கொச்சைப்படுத்துவதாக இருப்பதாக எதிர்ப்புகள் எழ, போஸ்டரை வெளியிட்ட படத்தின் இயக்குனர் மற்றும் நடிகை ஹன்சிகா மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கில்,
மஹா பட விவகாரத்தில் இயக்குனர் ஐமீல், நடிகை ஹன்சிகா மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் 2 வாரகாலத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.