Skip to main content

 50 ஆயிரம் பணத்தை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்த காவலர்கள்! 

Published on 19/10/2018 | Edited on 19/10/2018
po

 

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் காவல் நிலைய தலைமை காவலர் திருமேனி,  காவலர் திருமுருகன் ஆகியோர்  பாலக்கரை பேருந்து நிறுத்தத்தில் இருசக்கர வாகனத்தில் ரோந்து  பணியில் ஈடுபட்டிருந்தனர்.

 

அப்போது, அங்கு  ஒரு மணிபர்ஸ் கிடந்ததை எடுத்து பார்க்க அதில் 50,000 ரூபாய் பணம் மற்றும் அடையாள அட்டை  இருந்தது.   அதில் சேலம் மெயின் ரோட்டை சேர்ந்த வெங்கடேசன் மனைவி  கீதா என்று இருந்தது. அதை  ரோந்து பணியில் இருந்த காவலர்கள் விருத்தாச்சலம் உதவி காவல் கண்காணிப்பாளர் தீபாசத்தியனிடம்  ஒப்படைத்தனர். அடையாள அட்டையில் இருந்த செல் நம்பரை தொடர்பு கொண்டு விசாரணை செய்தபோது கைப்பையில் இருந்த பணத்தின் முழு விவரத்தை பறி கொடுத்தவர்கள்  தெரிவித்தனர்.  அதையடுத்து மணி பர்ஸ்சை தவறவிட்ட கீதா மற்றும் அவரது கணவரை வரவைத்து அவர்களிடம் தீபா சத்யன் பணத்தை ஒப்படைத்தார்.  பணத்தைப் பெற்றுக்கொண்ட கீதா மற்றும் அவரது கணவர் காவல்துறைக்கு நன்றியை தெரிவித்தனர். 

 

சரியான நேரத்தில் பணத்தை எடுத்து பாதிக்கப்பட்டவருக்கு  ஒப்புவித்த ரோந்து காவலர்களை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

 

சார்ந்த செய்திகள்