
நேற்று திருத்தணி அருகே பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் ஐந்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் நடந்த விபத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ளது நமணசமுத்திரம். இந்த பகுதியில் அமைந்துள்ள காவல் நிலையத்திற்கு அருகிலேயே டாடா ஏஸ் வாகனமும் இரண்டு கார்களும் மோதிக்கொண்டது. திருமயத்தில் இருந்து சென்ற காரும் டாட்டா ஏஸ் வாகனமும் புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது எதிரே வந்த கார் மீது இரண்டு வாகனங்கள் மீதும் மோதி கோர விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் பயணித்த ஒரு ஆண், பெண், டாட்டா ஏஸ் வாகனத்தில் பயணித்த ஒருவர் என 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணம் செய்த இரண்டு பெண்கள், ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் பாடுகாயத்துடன் மீட்கப்பட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரதேப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த கோர விபத்து சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.