Skip to main content

மாஜி விஜயபாஸ்கர் கரோனாவில் இருந்து குணமடைய 25 அதிமுகவினர் முடி காணிக்கை!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021
cv

 

இந்தியாவில் கரோனாவின் கோர தாண்டவம் உச்சம் தொட்டுவிட்டது. தமிழ்நாட்டிலும் அதே நிலை தான். கடந்த ஆண்டை விட வேகமாகவும் ஆபத்தாகவும் உள்ளது கரோனா. தற்போதைய நிலையில் ஆக்ஸிஜன் மற்றும  உயிர் காக்கும் மருந்துகள் பற்றாக்குறையை சமாளிக்க புதிய அரசு முயன்று வருகிறது. இந்த நிலையில் முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சரான விராலிமலை விஜயபாஸ்கர் தனது மாவட்டத்தில் மற்ற 5 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் தோற்றாலும் விராலிமலை தொகுதியில் சுமார் 23 ஆயிரம் ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற சில நாளிலேயே அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகவும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளவும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று விராலிமலை தொகுதி விஜயபாஸ்கரின் ஆதரவாளர் ஆவூர் முன்னாள் ஊ.ம தலைவர் மூர்த்தி தலைமையில் செங்களாக்குடி, ஒரன்டக்குடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 20 க்கும் மேற்பட்டோர் விராலிமலை சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் திரண்டு விஜயபாஸ்கரை வெற்றி பெற வைத்தமைக்காகவும் அவர் கரோனா தொற்றில் இருந்து விரைவில் பூரண குனமடைந்து வர வேண்டும் என்றும் வேண்டி மொட்டை அடித்து கொண்டு சிறப்பு வழிபாடுகள் செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்