டெங்கு - வீடு வீடாக ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல கிராமங்களிலும் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில் கடந்த 10 நாட்களுக்குள் பனங்குளம் காயத்திரி (4), காசிம்புதுப்பேட்டை ராதிகா (13), செரியலூர் இனாம் மாரியாயி (58) ஆகியோர் பலியானார்கள். மேலும் சுமார் 300 பேருக்கு மேல் காய்ச்சல் பாதிப்பு எற்பட்டு பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கீரமங்கலம் பகுதியில் டெங்கு காய்ச்சலால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதிகமானோர் இறந்ததால் அரசு தனிக்கவணம் செலுத்த வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கையையடுத்து ஆலங்குடி தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் சிவகாமிநாதன், கீரமங்கலம் வருவாய் ஆய்வாளர் ரெங்கராஜன் ஆகியோர் முன்னிலையில் டெங்கு ஒழிப்பு குழுவினர் வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகள், சுற்றப்புறங்களை ஆய்வு செய்து கொசு உற்பத்தி செய்யும் இடங்களை கண்டறிந்து அவற்றை அழிக்க மருந்துகள் தெளிக்கப்பட்டது. இந்த பணி தொடர்ந்து நடக்கும் என்றும் முழுமையாக டெங்கு கட்டுப்படுத்தும் வரை அதற்காக நியமிக்கப்பட்ட ஊழியர்கள் களப்பணி செய்வார்கள் என்றும் தாசில்தார் கூறினார். இந்த ஆய்வுப்பணியில் வருவாய்துறை, சுகாதராதுறை, பேரூராட்சி ஊழியர்கள் பங்கேற்றனர்.
பகத்சிங்