உலக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் சிவாஜி: ஓ.பி.எஸ் பேச்சு!
சிவாஜி மணிமண்டப திறப்பு விழாவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியதாவது,
திரையுலகினரின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசு முடிவு எடுக்கும். உலக தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் சிவாஜி கணேசன். தாயை நேசித்தவர்கர்கள் உயர்ந்த இடத்திற்கு வர முடியும் என்பதற்கு மக்கள் திலகமும், நடிகர் திலகமும் உதாரணம். 3 தலைமுறையினராக நடித்த சிவாஜிக்கு, அவரது தலைமுறையினர் பெருமை சேர்த்து வருகின்றனர். ஒரு தாய் மக்களாக அனைவரும் இந்த விழாவில் பங்கேற்றுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.