கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்குவால் பாதிக்கப்பட்டு 37 பேர் சிகிச்சை: செய்தி சேகரிக்க கட்டுப்பாடு
கடலூர் அரசு மருத்துவமனையில் இன்று 5 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சைக்காக சேர்க்கபட்டு உள்ளனர். சேமக்கோட்டையை சேர்ந்த விமல் (வயது 8 ), கோ.சத்திரம் சுமித்திரா (வயது 7), சிதம்பரம் வாண்டையார் இருப்பு சங்கவி (வயது 10), பண்ருட்டி உமாபதி (வயது 4), கோயம்புத்தூர் வைஜெயந்தி (வயது 22) இவர்கள் இன்று அரசு மருத்துவ மனையில் டெங்கு பாதிப்பால் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் டெங்கு எலிஸா டெஸ்ட்டுகள் கடலுர் அரசு மருத்துவமனையில் மட்டுமே வசதி உள்ளது. மேலும் கடலூர் மாவட்டடத்தில் 37 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் கடலூர் அரசு மருத்துவமனையில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்க தடைவிதித்து பேனர் வைக்கப்பட்டு உள்ளது. சுகாதார பணிகள் இணை இயக்குனர் பெயரில் இந்த பேனர் வைக்கப்பட்டு உள்ளது.அனுமதி பெற வேண்டும் என குறிப்பிடப்பட்டு உள்ள நிலையில் இணை இயக்குனர் சாதாரணமாக அவரது போனை எடுப்பதே இல்லை எப்படி செய்தி சேகரிப்பது என்பது கேள்விக்குறியாக உள்ளது என கடலூர் செய்தியாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் குறித்த தகவல்களை மறைக்கவே இது போன்ற தடை விதிக்கப்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
- சுந்தரபாண்டியன்