Skip to main content

பயிர் காப்பீடுத் தொகையை வழங்கிட வேண்டும்.. - சி.பி.ஐ.எம்.எல். வெங்கடேசன்

Published on 11/12/2020 | Edited on 11/12/2020

 

Crop insurance should be provided .. - CPI (ML) Venkatesh

 

விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு தொகை பல ஆண்டுகளாக வழங்காமல் உள்ளதை வழங்கிட கோரி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பு செயலாளர் வெங்கடேசன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஒருங்கிணைந்த மாவட்டங்கள், விவசாயிகள் பயிர்க் கடன் வங்கிகளில் வாங்கும்போது வைப்புத் தொகையும், பயிருக்கான காப்பீட்டுத் தொகையும் பிடித்தம் செய்து கொள்ளுகிறார்கள்.

 

அதுமட்டுமல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையை விவசாயிகள் செலுத்தி வருகிறார்கள். ஆனால், எந்த ஆண்டிலும் காப்பீட்டுத் தொகை விவசாயிகளுக்கு இதுநாள்வரை வழங்கப்படவில்லை.

 


ஒவ்வொரு ஆண்டும் மழை, புயல் மற்றும் இயற்கை சூழலால் விவசாயிகள் பயிர்கள் நாசம் ஏற்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு உரிய காப்பீட்டுத் தொகை வழங்காத நிலையில், தற்பொழுது நிவர் புயல் தொடர் மழையால் பல நூறு ஏக்கர் நிலங்கள் உளுந்து, நெல் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளது. இந்நிலையில் பிரதம மந்திரி ‘ஃபசல் பீமா யோஜனா’ பயிர் காப்பீடு திட்டம், உளுந்து பயிர் ஒரு ஏக்கருக்கு 240 ரூபாய் வீதம் காப்பீடு செய்திட சொல்லப்படுகிறது. 

 


சேதமடைந்த பயிர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்குவதற்கு மாறாக பயிர் இன்சூரன்ஸ் செய்தால் உடனே இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி இருக்கிறார்கள். அப்படி பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இவ்வளவு காலமும் தொகை வருவதற்கான எந்த உத்தரவாதமும் அரசு தரப்பில் அறிவிக்கப்படவில்லை.  

 


விவசாயிகள், கட்டுப்படியான விலை இல்லாமல் தரமற்ற விதைகள் விற்பதால் தரமற்ற பூச்சிமருந்து பல்வேறு இன்னல்களுக்கு சிறுகுறு ஏழை விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் தள்ளப்பட்டு இருக்கிற சூழலில் உளுந்தூர்பேட்டை அருகே பாண்டூர் விவசாயி தொப்பளான் என்பவர் உளுந்து பயிர் மஞ்சள் நோய் தாக்கியதால் தனியார் மருந்துக்கடைகளில் வாங்கி அடித்தால் உயிர் ஆபத்தான நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

 

வெளியே தெரியாமல் எவ்வளவோ, அரசு உடனடியாக பயிர் காப்பீட்டுத் தொகையும் நிவாரணத் தொகையும் வழங்குவதற்கான மாவட்ட ஆட்சியர் வேளாண்மைத்துறை அதிகாரிகள் விவசாயிகள் அழைத்து நிவாரணம் குறித்து  சிறப்பு கூட்டமாக ஒன்றியம் மட்டங்களில் நடத்தப்பட்டு அறிக்கையை தமிழக முதல் அமைச்சர், வேளாண்மை துறை தலைமைச் செயலாளர், மத்திய வேளாண்மை துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்ய வேண்டுமாறு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கள்ளக்குறிச்சி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பு கமிட்டியின் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.  என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்