Skip to main content

நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை: 120 பேர் கைது!

Published on 29/09/2017 | Edited on 29/09/2017
நெல்லையில் போராட்டம் நடத்திய பத்திரிகையாளர்கள் மீது அடக்குமுறை: 120 பேர் கைது!



நெல்லை பத்திரிகையாளர் மன்ற அவசரக் கூட்டம் சங்க தலைவர் நாகமணி தலைமையில் நடந்தது. அதில் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் அலெக்ஸ் துணை தலைவர் முத்துராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அதில் முன்னாள் தலைவரான அய்.கோ.பால்சாமி கூட்டத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார்.

மகேந்திரகிரி மலை தொடர்பாக பத்திரிகை ஊடங்களில் செய்தி வெளியான குறித்து தினகரன் மற்றும் புதிய தலைமுறை செய்தியாளர்கள் மீது பணகுடி போலீசார் குற்ற வழக்குப் பதிவு செய்த்தைத் திரும்பப் பெறக் கோரி இன்று 29ம் தேதி காலை நெல்லை மாவட்ட எஸ்.பி.அலுவலகம் முன்பு அனைத்து பத்திரிகையாளர்கள் ஆதரவுடன் முற்றுகைப் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது என்றார்.

அதன்படி இன்று நெல்லை, தூத்துக்குடி நாகர்கோவில் விருதுநகர் மாவட்டப் பத்திரிகையாளர்கள் சுமார் நூறுக்கும் மேற்பட்டவர்கள் போராட்டக்குழுதலைவரான அய்கோ மற்றும் நாகமணி சீனிவாசன் தலைமையில் காலை 11.30 மணியாளவில் திரண்டார்கள். நெல்லை எஸ்.பி.அலுவலகத்தை முற்றுகையிடச் சென்ற பத்திரிகையாளர்களை சமாதானபுரம் ரோட்டிலேயே மடக்கிய (எஸ்.பி. பொறுப்பு) மாநகர துணைக் கமிசனர் சுகுணாசிங்கின் தலைமையிலான போலீசார், அவர்களை மேற்கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை.

இதனால் போலீசாருக்கும் பத்திரிகையாளர்களுக்கு மிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. அதில் தலையிட்ட டி.சி.சுகுணாசிங்கிடம், அய்.கோ. தலைமையிலானவர்கள் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படாமல் போகவே உயரதிகாரியான டி.ஐ.ஜி. கபில்குமார் சராத்கரிடம் முறையிடும் பொருட்டு அவரது அலுவலகம் நோக்கி நடந்து சென்றனர்.

உடனே அவர்களை ஏ.சி. விஜயகுமார் தலைமையிலான போலீசார் மறித்தனர். நாங்கள் மறியலுக்குச் செல்லவில்லை. டி.ஐ.ஜி.யிடம் முறையிடப் போவதாகச் சொன்னதை ஏற்க மறுத்த ஏ.சி.விஜயகுமார், போலீஸ் டீமுடன் பத்திரிகையாளர்களைக் கைது செய்வதாகக் கூறினார். இதில் இருதரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வலுக்கட்டாயமாகப் பத்திரிகையாளர்களைப் பிடித்து இழுத்து போலீசார் வேனில் ஏற்றியபோது செய்தியாளர்களான கடையம் பாரதி, நாகர்கோவில் மனோ ஸ்ரீவைகுண்டம் ஞானதுரை உள்ளிட்ட மூவருக்குக் காயம் ஏற்பட்டது. போலீசின் அடக்கு முறையைக் கண்டித்தனர் பத்திரிகையாளர்கள். அதையும் மீறி 120 பத்திரிகையாளர்களைக் கைது செய்து ஏ.டி.எம்.என். மகாலுக்குக் கொண்டு வந்தனர்.

பின்னர் டி.ஐ.ஜி.யிடமிருந்து வந்த தகவலையடுத்து பத்திரிகையாளர்களின் பிரதி நிதியாகப் 13 பேர்களடங்கிய குழு பேச்சுவார்த்தைக்காகச் சென்றனர்.

- பரமசிவன்
படங்கள்: ப.இராம்குமார்

சார்ந்த செய்திகள்