Published on 23/03/2021 | Edited on 23/03/2021

தமிழகத்தில் கரோனா பரவலை தடுப்பது குறித்து தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், வல்லுநர் குழு, மருத்துவ நிபுணர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திவருகிறார். தமிழகம் முழுவதும் கடந்த சில தினங்களாக கரோனா பரவல் அதிகளவில் இருந்துவருகிறது. குறிப்பாக தஞ்சாவூர், சென்னை உள்ளிட்ட இடங்களில் கரோனா பரவல் அதிகளவில் அதிகரித்து வருகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில், இதனை எப்படி தடுப்பது. கூடுதல் தடுப்பு நடவடிக்கை, கூடுதல் கட்டுப்பாடுகள் உள்ளிட்டவை தேவையா என்பன குறித்து ஆலோசனை செய்ய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.