Published on 21/06/2022 | Edited on 21/06/2022

தமிழகத்தில் நெல் கொள்முதலை முன்கூட்டியே தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் இந்த ஆண்டு வேளாண்மைக்கு சாதகமான பருவம் நிலவுவதால், நெல் கொள்முதல் காலத்தினை வரும் அக்டோபர் 1- ஆம் தேதி தொடங்குவதற்கு பதிலாக, செப்டம்பர் 1- ஆம் தேதி அன்று முதலே நெல் கொள்முதலைத் தொடங்கிட மத்திய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு உத்தரவிடுமாறு கோரி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.