Schools holiday in two places due to heavy rains

வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Advertisment

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 17ம் தேதி வரை மழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது.

Advertisment

இதன் காரணமாகத்திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட சீர்காழி, மயிலாடுதுறை போன்ற பகுதிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் சுற்றுப்பயணம் செய்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். இன்று சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்குப் பாதிப்பின் அளவைப் பொறுத்து நிவாரணத் தொகை வழங்கப்படும் எனவும் கூறினார்.

இந்நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடியில் பள்ளிகளுக்கு இன்று(15/12/2022)விடுமுறை விடப்பட்டுள்ளது.