Skip to main content

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கருக்கு கரோனா உறுதி!

Published on 09/05/2021 | Edited on 09/05/2021
hjk

 

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகிறது. அதே போன்று தென் மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வட மாநிலங்களை விட சற்று அதிகமாக இருந்து வருகிறது. தமிழகத்தில் கரோனா பாதிப்பு தற்போது தீவிரமாக இருந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அடுத்தடுத்து பாதிப்புக்குள்ளாகி வந்தார்கள். இந்நிலையில் தமிழக பிற்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கரோனா பாதிப்புக்குள்ளாகியுள்ளார். இதன் காரணமாக இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை.
 

 

சார்ந்த செய்திகள்