Skip to main content

கோவை குஜராத்தி சமாஜில் நவராத்திரி உற்சவ விழா பெண்கள் டண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
கோவை குஜராத்தி சமாஜில் நவராத்திரி உற்சவ விழா 
பெண்கள் டண்டியா மற்றும் தர்பா நடனம் ஆடி மகிழ்ந்தனர்

தூர்க்கை அம்மன் 9 நாட்கள் விரதம் இருந்து அரக்கனை கொன்றதை நினைவுபடுத்தும் வகையில் நவராத்திரி விழாவின் கடைசி நாள் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக இவ்விழாவினை தமிழகத்தில் வாழ்ந்து வரும் குஜராத் மாநில மக்கள் வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். இதன்படி கோவையில் உள்ள குஜராத்தி சாமாஜ் அரங்கில் வட மாநிலத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர். 

இதைதொடர்ந்து டாண்டியா மற்றும் தர்பா ஆகிய பராம்பரிய நடனத்தை ஆடி மகிழ்ந்தனர். கெட்ட எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வரவேற்கும் விதமாக இந்த விழாவினை கொண்டாடுவதாக வட மாநில மக்கள் தெரிவித்தனர்.  விடிய விடிய நடந்த இந்த ஆட்டத்தில் நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டனர்.

-அருள்

சார்ந்த செய்திகள்