Skip to main content

"திடீர் மின்தடைக்கு மத்திய அரசே காரணம்" - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

senthil balaji

 

தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் நேற்று இரவு அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டது. இரவு 7.30 முதல் பல இடங்களில் விட்டுவிட்டும், சில இடங்களில் தொடர்ந்து மின்வெட்டு நிலவியதாலும் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்திவந்த நிலையில், மின்வெட்டிற்கான காரணம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

 

இது குறித்து நேற்று நள்ளிரவில் அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "இன்றிரவு மத்திய தொகுப்பில் இருந்து தென் மாநிலங்களுக்கு வழங்கப்படும் மின்சாரம் சுமார் 750 மெகாவாட் திடீரென தடைப்பட்டது. இதன் காரணமாக சில இடங்களில் ஏற்பட்ட மின்பற்றாக்குறையை சமாளிக்க நமது வாரியத்தின் உற்பத்தித்திறனை உடனடியாக அதிகரித்தும், தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் நகர்ப்புறங்களில் உடனடியாக நிலைமை சரி செய்யப்பட்டது. ஊரகப் பகுதிகளிலும் அடுத்த 15 நிமிடங்களில் நிலைமை சீரடைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்