Inauguration intensity-BJP leaders meet the President of the Republic

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகின. தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தனிப் பெரும்பான்மை என்ற நிலையை இழந்து கூட்டணி ஆட்சியையே மத்தியில் பாஜக அமைக்க உள்ளது. மொத்தம் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 293இடங்களில் பாஜகமட்டும்தனித்து 239 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 272 தொகுதிகளை எந்த கட்சியும் தனித்துப் பெறாததால் கூட்டணி ஆட்சி அமையும் சூழ்நிலை நிலவுகிறது. இதனையொட்டி டெல்லியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற இருக்கிறது.

17வது மக்களவையை கலைக்க குடியரசுத் தலைவருக்கு மத்திய அமைச்சரவை பரிந்துரைக்க உள்ளதாகவும், வரும் சனிக்கிழமை ( ஜூன்8 ) பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்பார் எனவும் தகவல்கள் வெளியாகி இருந்த நிலையில் தற்போது டெல்லியில் குடியரசுத் தலைவர் இல்லத்தில் திரௌபதி முர்முவை சந்தித்து பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜநாத் சிங் ஆகியோர் நேரில் சந்தித்து அமைச்சரவையை கலைப்பதற்கான ராஜினாமா கடிதத்தையும் அதற்கான தீர்மானத்தையும் வழங்கினர். ஜூன் 8 ஆம் தேதி மோடி பதவி ஏற்கும் வரை அவர் காபந்து பிரதமராகமோடி நீடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.