
தமிழகத்தில் உள்ள மிகப்பெரிய பேருந்து நிலையமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளது. தமிழகம் முழுவதும் இங்கிருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதனால் சென்னையில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதிலும் குறிப்பாக பண்டிகை நாட்களில் சென்னை மாநகரம் கடும் வாகன நெரிசலில் சிக்கத் தவிக்கும். கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் செல்லவே சில மணி நேரம் ஆகிவிடும்.
இதனை தவிர்க்க சுமார் 393 கோடி செலவில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வரும் அந்த பேருந்து நிலையம் வரும் 2022ம் ஆண்டும் மார்ச் மாதம் செயல்பாட்டுக்கு வரும் என்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் செயல்பாட்டுக்கு வந்தால் தென் தமிழகத்துக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்தே புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.