Skip to main content

’இணைய விமர்சனங்களை கண்டுக்கொள்ள வேண்டாம்’- மன்றத்தினருக்கு ரஜினி ஆலோசனை

Published on 19/02/2019 | Edited on 19/02/2019

 

காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் 44 பேர் தீவிரவாத தாக்குதலால் படுகொலை செய்யப்பட்டனர்.  இதற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக வேலூரில், வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர் சோளிங்கர் ரவி தலைமையில் மெழுகுவர்த்தி ஏற்றி பிப்ரவரி 18-ஆம் தேதி அஞ்சலி செலுத்தினர்.

 

ra

 

அதன் பின்னர் மாவட்டம் முழுவதிலும் இருந்து வந்திருந்த அமைப்பின் ஒன்றிய நகர பேரூர் அமைப்புகளின் நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது, கடந்த வாரம் நடிகர் ரஜினிகாந்த் தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை தனது இல்லத்தில் கூட்டியிருந்தார் அங்கு பேசும் பொழுது நாடாளுமன்றத் தேர்தல் என்பது காங்கிரஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய போட்டியை ஏற்படுத்தும், தமிழகத்தில் 50 ஆண்டுகளாக கட்சியை நடத்தும் திமுக அதிமுக போன்ற கட்சிகள் வாழ்வா சாவா பிரச்சினை, அவர்கள் இதில் படு தீவிரமாக களம் இறங்குவார்கள். நாம் இப்போதுதான் அமைப்பை தொடங்கி உள்ளோம் நாம் அவர்களோடு போட்டி போடத் தேவையில்லை.

 

நம்முடைய இலக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாம் அதில் முழு கவனத்தை செலுத்துவோம் எனக் கூறினார். தமது அமைப்பின் நிர்வாகிகள் அமைப்பில் உள்ளவர்கள் சமூகவலைதளங்களில் மன்றத்தின் மீது வைக்கப்படும் விமர்சனங்களுக்கு பதில் அளிக்க தேவையில்லை, சீமான் அமைப்பினர் உட்பட வேறு சில அமைப்பினர் நம் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை வைத்து விமர்சிக்கின்றனர். அப்படிப்பட்ட விமர்சனங்களுக்கு நாம் முகம் கொடுக்க தேவையில்லை, பதில் சொல்ல தேவை இல்லை இதனை நம் மன்றத்தில் வலியுறுத்துங்கள் என்றார். 

 

r

 

அதேபோல் கட்சி நிகழ்ச்சிகளை பெரிய அளவில் நிர்வாகிகள் செலவு செய்து ஏற்பாடு செய்ய வேண்டாம் சில சிறு சிறு உதவிகளை செய்தாலே போதும்,  ஏன் எனில் நிர்வாகிகளுக்கு முதலில் அவர்களது குடும்பம் முக்கியம் அதை பார்க்க வேண்டும் பொதுமக்களுக்கு தேவையான சில சிறு சிறு உதவிகளை செய்ய வேண்டும், மக்களோடு மக்களாக பழக வேண்டும் அவர்களின் அனைத்து சுக துக்கங்களில் கலந்து கொள்ள வேண்டும், கிராமங்களில் திருவிழாக்கள் நடைபெற்றால் அதில் நாம் சென்று கலந்து கொள்ள வேண்டும், அனைத்து கட்சிகளுடன் நாம் ஒரு நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும், நம் மக்கள் மன்றத்தை பார்க்கும் பொது மக்கள் இவர்கள் நல்லவர்கள் என பேசவேண்டும், வீண் விவகாரங்களில் தலையிடக் கூடாது என வலியுறுத்தியது பற்றி கீழ் மட்டத்திலுள்ள நிர்வாகிகளுக்கு தெரியப்படுத்திநார்.

 

இந்தக் கூட்டத்தில் சிலர் கட்சி தொடஙகி தேர்தலில் போட்டியிடலாம் எனச்சொல்லி அமைப்பை தொடங்கிய தலைவர் பின்னர் பின் வாங்குவது ஏன் என கேள்வி எழுப்பினார்கள். 

 

நம்முடைய இலக்கு சட்டமன்றத் தேர்தல் தான் என சொல்லி உள்ளார் தலைவர். சட்டமன்றத் தேர்தலில் பொட்டியிட அமைப்பை தயார் படுத்த சொல்லியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின் ஒரு பெரிய அரசியல் மாற்றம் தமிழகத்திலும் இந்தியாவிலும் ஏற்படும் அந்த அரசியல் மாற்றத்தை நாம் கையில் எடுத்துக்கொண்டு நாம் களத்தில் இறங்குவோம் சட்டமன்றத் தேர்தலில் நம் பலத்தை காட்டுவோம் என கூறியுள்ளார் என பதிலளித்துள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மக்களவைத் தேர்தல்; இந்தியா கூட்டணியில் சிக்கல்!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Trouble in India's alliance at Lok Sabha Elections

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது . இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க, அ.தி.மு.க, நாம் தமிழர், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள், தங்களது வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த மக்களவை தேர்தலில், பா.ஜ.கவை வீழ்த்துவதற்காக கடந்த ஆண்டு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியை உருவாக்கின. இந்த இந்தியா கூட்டணியில், காங்கிரஸ், ஆம் ஆத்மி, தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், தேசிய மாநாட்டு கட்சி (என்.சி), மக்கள் ஜனநாயகக் கட்சி (பி.டி.பி), சமாஜ்வாதி கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. தொகுதி பங்கீடு குறித்து தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவித்த காங்கிரஸுக்கு மேலும் அதிர்ச்சி தரும் வகையில், மேற்கு வங்கத்தில் 42 தொகுதியில் போட்டியிடும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார். 

அதனை தொடர்ந்து, 13 மக்களவைத் தொகுதிகள் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி கட்சி, அம்மாநிலத்தில் மட்டும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீரில் உள்ள 5 மக்களவைத் தொகுதிகளை பிரிப்பது தொடர்பாக இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசிய மாநாட்டு கட்சிக்கும், மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. 

அதில் குறிப்பாக, காஷ்மீரில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளிலும் போட்டியிடுவதை மக்கள் ஜனநாயகக் கட்சி தவிர்க்க வேண்டும் என்ற தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவர் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். இது மக்கள் ஜனநாயகக் கட்சிக்கும் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்தியா கூட்டணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் காஷ்மீரில் தனித்து போட்டியிடுவதாக மக்கள் ஜனநாயகக் கட்சி அறிவித்துள்ளது.

Trouble in India's alliance at Lok Sabha Elections

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் 5 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 மக்களவைத் தொகுதிகளில் தனித்து போட்டியிடப்போவதாக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்துள்ளது. இது குறித்து மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தி தெரிவித்துள்ளதாவது, “மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு எங்கேயும் ஆதரவு இல்லை என்றும், 2019ஆம் ஆண்டு தேர்தலின் கட்சி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டதாகவும் உமர் அப்துல்லா தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து மிகவும் கடுமையானது. 

மேலும், காஷ்மீர் பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி தன்னிச்சையாக அறிவித்துள்ளது. எனவே, மக்கள் ஜனநாயகக் கட்சி மக்களவைத் தேர்தலின் வேட்பாளர்களை அறிவித்து போட்டியிடுவதை தவிர வேறு வழியில்லாத சூழலை தேசிய மாநாட்டு கட்சி ஏற்படுத்திவிட்டது. எனவே, இந்த பிராந்தியத்தில் உள்ள 3 தொகுதியிலும் எங்கள் கட்சி தனித்து போட்டியிடும். வேட்பாளர்களை கட்சியின் நாடாளுமன்ற குழு இறுதி செய்து விரைவில் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

‘கிரிக்கெட் ரசிகர்கள் கவனத்திற்கு’ - ஐ.பி.எல். நிர்வாகம் முக்கிய தகவல்! 

Published on 11/03/2024 | Edited on 11/03/2024
Attention Cricket Fans - IPL Administration is key information

உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதன் 17 ஆவது சீசன் இந்த ஆண்டு (2024) மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். தொடருக்கான முதற்கட்ட அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி மார்ச் 22 ஆம் தேதி ஐ.பி.எல். தொடர் தொடங்கவுள்ளது. ஏப்ரல் 7 ஆம் தேதி வரை 21 போட்டிகள் முதற்கட்டமாக நடைபெறவுள்ளன.

அந்த வகையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மார்ச் 22இல் நடைபெறும் ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி - பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 9வது முறையாக ஐ.பி.எல். சீசனின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்குகிறது. மேலும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2 ஆம் கட்ட அட்டவணை வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

அதே சமயம் கடந்த ஆண்டு நேரடியாக டிக்கெட் வாங்கி கள்ளச் சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில், இந்த புகார்களை தடுக்கும் வகையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ள போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைனில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் விற்பனை குறித்த தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.