ஆயுதபூஜை, விஜயதசமிக்கு ஆளுநர் வாழ்த்து
ஆயுதபூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:

இந்த பண்டிகைகள் அறிவென்ற விளக்கை ஏற்றட்டும்; ஞானத்தையும் கல்வி அறிவையும் பரவச் செய்யட்டும்; புதிய முயற்சிகளையும் திறன் மேம்பாட்டையும் வளர்க்கட்டும்; வளம், செல்வம் உள்பட ஒட்டு மொத்த வளர்ச்சியை ஏற்படுத்தட்டும் என்று வாழ்த்துகிறேன்.
தமிழகம் மற்றும் உலகத்தின் மற்ற நாடுகளிலும் வாழும் தமிழ் மக்களுக்கு ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி வாழ்த்துகளை கூறிக்கொள்கிறேன்.