அவதூறாகத்திட்டிய கலெக்டரைக் கண்டித்து
அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்!

நெல்லை கலெக்டரான சந்திப் நந்தூரியைக் கண்டித்து பாளை அரசு மருத்துவமனை டாக்டர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அரசு டாக்டர்கள் சங்கத்தினர், மருந்தாளுனர்கள் சங்கத்தினர், செவிலியர்கள் சங்கத்தினர் உள்பட பல்வேறு சங்கத்தினர் அரசு டாக்டர்கள் சங்கத் தலைவர் முகம்மது ரபீக் தலைமையில் திரண்டார்கள்.
செயலாளர் டாக்டர் ஜெஸ்லின், டாக்டர்களான அஸ்ரப், அமலன், அபுல்காசிம் உள்ளிட்டோர்கள் முன்னிலை வகித்தனர்.
’’இந்த ஆர்ப்பாட்டம் நடத்திய நிர்வாகிகள் செல்லுவது.’’
ஆய்வுக் கூட்டங்களை நடத்தும் கலெக்டர், நீண்ட நேரம் கழித்துத் தொடங்கி இரவு 9 மணியையும் தாண்டி நடத்துவதால் தொலை தூரங்களிலுள்ள பெண் ஊழியர்கள் ஊர் திரும்ப சிரமப்படுகின்றனர். ஆய்வுக் கூட்டங்களில் அதிகாரிகளைக் கலெக்டர் அவதூறாகத் திட்டுகிறார். மருத்துவமனை உயரதிகார டாக்டரைக் கண்ணியக் குறைவாகத் திட்டுகிற கலெக்டர், மகளிர் வார்டு அருகே அன்புச்சுவர் அமைக்க வற்புறுத்துகிறார். அதற்கு சுகாதாரத்துறையின் அனுமதி தேவை என்பது அவருக்குப் புரியவில்லை. தொடர்ந்து திட்டும் கலெக்டர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையேல் அவரைப் பணி மாற்றம் செய்ய வேண்டும் இதனை வலியுறுத்தி சென்னையிலும் போராட்டம் நடத்தப்பட்டது. மற்ற மாவட்டங்களிலும் போராட்டம் நடக்கும். அடக்கு முறை தொடருமேயானால் எங்களின் போராட்டம் தீவிரமாகும் என்கிறார்கள்.
கலெக்டரைக் கண்டித்து அரசு டாக்டர்கள் நடத்திய போராட்டம் மாவட்டத்தில் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது.
- பரமசிவன்
படம்: ப.இராம்குமார்