அனிதா மரணம் நியாயம் கேட்டு மாணவர் சங்கம் சாலை மறியல்

மாணவி அனிதா மரணத்திற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை பாரிமுனை அருகே மாநிலத் தலைவர் வீ.மாரியப்பன் தலைமையில் சாலை மறியல் நடைபெற்றது. இதில் மாநில நிர்வாகி நிருபன், மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் இசக்கி, நிர்வாகிகள் ராஜேந்திரபிரசாத், சந்தியா, ஜுகைத், சுபாஷ், மணி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
-அசோக்குமார்