வேலூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தற்போது அரசியல் கட்சியினர் அங்கு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்வேலூரில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி,

 minister rajendrabalaji election campaign

Advertisment

அரை மணி நேரத்தில் ஆட்சியை மாற்றலாம் என நினைப்பதற்குநாங்கள் என்ன குமாரசாமியா? என கேள்வி எழுப்பிய அமைச்சர், நாங்கள் நினைத்தால் அரசியலில் இருந்து ஸ்டாலினை வெளியேற்ற முடியும். டெல்லி சென்றுள்ள திமுக எம்பிக்கள் காந்தி சிலை முன்பு போராட்டம்தான்நடத்துகின்றனர் என்றார்.

மேலும்ஆட்சியமைக்க ஸ்டாலினுக்கு ஜாதக பொருத்தம் இல்லை. வாரிசு அரசியலால்திமுகவிற்கு இனி வளர்ச்சி இருக்காது எனவும் விமர்சித்தார்.

Advertisment