மனித சங்கிலி போராட்டத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்று வரை வழங்காததை கண்டித்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம், முற்றுகை, பேரணி, உண்ணாவிரதம் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் போரட்டங்களை தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் செவ்வாயன்று ஊழியர்கள் அனைவரும் அண்ணாமலைப் பல்கலைக் கழக விவசாய கல்லூரியில் இருந்து பல்கலைக்கழக வாயிலில் உள்ள ராஜேந்திரன் சிலை வரை 3 கி.மீ தூரத்திற்கு மேல் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாத ஊதியம் தாமதமாக வழங்கும் அரசை கண்டித்து கோசங்களை எழுப்பினார்கள். மேலும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய அனைத்து பயன்களையும் உடனே வழங்க வலியுறுத்தி கோசங்களை எழுப்பினர்.
- சுந்தரபாண்டியன்