Skip to main content

அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாக வாய்ப்பு..!

Published on 08/03/2021 | Edited on 08/03/2021

 

hk

 

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுடன் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடித்து தொகுதிகளின் எண்ணிக்கையை உறுதி செய்துள்ளது. 

 

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு முடிந்துள்ளது. இந்நிலையில் அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சில தினங்களுக்கு முன்பு அதிமுக தலைமை வெளியிட்டிருந்தது. சுமார் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் அதில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று (08.03.2021) இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனை தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் பெயர்களை அறிவிப்பார்கள் என்று அக்கட்சி தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்