Skip to main content

எதிர்க்கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்க அதிமுக வலை!

Published on 07/04/2019 | Edited on 07/04/2019

 

வாக்குப்பதிவு நாள் நெருங்க நெருங்க தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணியும், அகில இந்திய அளவில் பாஜக கூட்டணியும் எதிர்க்கட்சிகளைப் பார்த்து பயப்படத் தொடங்கியிருக்கின்றன. அகில இந்திய அளவில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி வருகிறது. காங்கிரஸ் கட்சி எடுக்கும் திடீர் முடிவுகள் பாஜக கூட்டணிக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

n

 

தமிழகத்தை பொறுத்தமட்டில் 40 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்தத் தொகுதிகளில் திமுக தலைமையிலான கூட்டணிக்கே வெற்றிவாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என தெரியவந்துள்ளது. எனவே அதிமுக கூட்டணிக் கட்சிகள் பல்வேறு தில்லுமுல்லுகளில் ஈடுபடத் தயாராகிவருகின்றன.

 

இதன் வெளிப்பாடுதான், வாக்குச் சாவடிகளை கைப்பற்றும் வகையில் தொண்டர்களை உசுப்பேத்தும் அன்புமணி மற்றும் ராமதாஸ் ஆகியோரின் பேச்சு என்கிறார்கள். பட்டவர்த்தனமாகவே பொதுமேடையில் கட்சிக்காரர்களிடம் அன்புமணியும் ராமதாஸும் வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருப்பது, வாக்காளர்ளை அச்சுறுத்தும் நோக்கம் கொண்டதாகும் என்று புகார்கள் பதிவாகி இருக்கின்றன.

 

இதனிடையே ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் மகன்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளில் திமுக அணியில் தேர்தல் பணியாற்றும் ஊராட்சி செயலாளர்கள் முதல் முக்கிய நிர்வாகிகளை விலைபேசி அவர்களுடைய வேலையில் சுணக்கம் ஏற்படுத்த ஆளுங்கட்சி தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

 

தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களையே விலைபேசும் நிலைக்கு ஆளுங்கட்சி துணிந்திருப்பதாக கூறப்படும் நிலையில், திமுக தலைமையும் கூட்டணிக்கட்சிகளின் தலைவர்களும் கடைசிநேர தேர்தல் பணியை தீவிரப்படுத்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்று திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

 

அகில இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தேர்தல் பணிகளை தங்களுக்கு ஏற்றவகையில் திட்டமிடுவதற்கு வசதியாக, மேற்கு வங்கம் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் தலைமைச் செயலாளர்களையும் போலீஸ் அதிகாரிகளையும் தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. இது தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மைக்கு அழகல்ல என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டித்திருக்கிறார்கள்.

 

இந்நிலையில்தான், தேர்தலுக்கு முந்தைய கூட்டணிகளிலும் சில மாற்றங்கள் அதிரடியாக ஏற்பட்டிருப்பது பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லி மாநிலத்தில் ஆம் ஆத்மியும், காங்கிரஸும் கூட்டணியை உறுதிப்படுத்தி தொகுதிப் பங்கீடையும் முடித்துள்ளன. அதுபோலவே, ஹரியானாவிலும் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகின்றன. இதையடுத்தும் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளும் பாஜகவுக்கு இல்லை என்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. ஹரியானாவிலும் பெரும்பாலான தொகுதிகள் காங்கிரஸ் கூட்டணிக்கே கிடைக்கும் என்ற நிலை உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

 

கடந்தமுறை பாஜகவின் சீட் எண்ணிக்கையை அதிகப்படுத்த உதவிய உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், டெல்லி, ஆகிய மாநிலங்களில் மொத்தமாக பாஜக 70 இடங்களைப் பெற்றாலே அதிகம் என்ற நிலை இருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான், மோடி தனது பேச்சில் அடுத்தடுத்து முரண்பாடுகளை வெளிப்படுத்துகிறார் என்கிறார்கள். ஆட்சி போகப்போகிற கடைசி நேரத்தில், தன்னை பிரதமராக நினைக்க வேண்டாம், நண்பனாக நினையுங்கள் என்று நண்பர் அவதாரம் எடுத்திருக்கிறார் என்று கிண்டல் செய்கிறார்கள்.

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.