/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/iran-car-art.jpg)
ஈரான் தலைநகர் டெக்ரானில் நிகழ்ந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்தியாவில் உள்ள ஈரான் தூதரகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 5 மாணவர்களும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது. கெசாபர்த் என்ற தெருவில் உள்ள குடியிருப்பு பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.06.2025) ஏற்பட்ட தாக்குதலின் போது 5 இந்திய மாணவர்கள் காயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மாணவர்கள் தங்கியிருந்த விடுதியின் மீது இஸ்ரேலின் ஏவுகணைகள் விழுந்துள்ளது. இதன் காரணமாக மாணவர்கள் காயமடைந்துள்ளனர். அதன் பின்னர் மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார்கள் என்ற தகவலையும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த ஏவுகணை தாக்குதலில் 4 இந்திய மாணவர்கள் உட்பட சுமார் 37 சர்வதேச மாணவர்கள் அங்கிருந்து பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்கள் எனவும் அவர்கள் விரைவில் சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈரான் அரசு ஈடுபட்டு வருவதாக ஈரான் தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
காயமடைந்த 5 மாணவர்களும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. இந்திய மாணவர்கள் அர்மேனியா வழியாக இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மத்திய வெளியுறவுத்துறையின் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஈரான் தலைநகர் டெக்ரானில் நிகழ்ந்த தாக்குதலில் 5 இந்திய மாணவர்கள் காயம் அடைந்துள்ள சம்பவம் இந்திய மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)