கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்பொழுது தமிழகத்தில் மேலும் 64 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 1,885 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 60 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,020 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் தமிழகத்தில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 29,059 பேர் உள்ளனர். 26 பேர் அரசு கண்காணிப்பில் உள்ளனர். சென்னையில் கரோனா பாதிப்பு 500- ஐ தாண்டியுள்ளது. சென்னையில் மேலும் 26 பேருக்கு கரோனா உறுதியானதாகியுள்ளது. மதுரையில் 15 பேருக்கும். விருதுநகரில் 7 பேருக்கும். விழுப்புரம் நாமக்கல்லில் தலா 4 பேருக்கும், திருப்பூரில் இரண்டு பேருக்கும், திருவள்ளூர் ,சேலம், ராமநாதபுரம், கள்ளக்குறிச்சியில் தலா ஒருவரும் கரோனா இன்று உறுதியாகியுள்ளது.