Skip to main content

ஒடிசாவில் யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றவர் உயிரிழப்பு!

Published on 03/09/2017 | Edited on 03/09/2017
ஒடிசாவில் யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றவர் உயிரிழப்பு!

ஒடிசா மாநிலத்தின் வனப்பகுதியில் காட்டு யானையுடன் செல்ஃபி எடுக்க முயன்றவர், அதே யானையால் கடுமையாக தாக்கப்பட்டதில் உயிரிழந்தார்.

ஒடிசா மாநிலம் ரோர்கேலா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி மாண்டியாகுடார். இங்கு யானைகள் உள்ளிட்ட பல்வேறு விதமான காட்டு யானைகள் வசித்து வருகின்றன. இந்தப் பகுதிக்கு சுந்தர்கார் பகுதியைச் சேர்ந்த பார்தி என்பவர் சென்றிருக்கிறார். அப்போது அந்த வழியே வந்த யானையைக் கண்டவுடன் தனது செல்போனில் படமெடுத்துள்ளார். மேலும், சிறிது நெருங்கி அதனுடன் செல்ஃபி எடுக்கவும் முயற்சித்துள்ளார். அச்சமயம், யானை திடீரென அவரை விரட்டி வந்து கடுமையாக தாக்கி, மிதித்துள்ளது. இதனை அந்தப் பகுதியில் இருந்தவர்கள் தங்கள் செல்போன்களில் படமாக எடுத்துள்ளனர்.

பின்னர், யானையிடம் இருந்து மீட்கப்பட்ட பார்தி, மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்