Skip to main content

நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி

Published on 20/09/2017 | Edited on 20/09/2017
நமது பாரம்பரியத்தை பாதுகாப்பது வேண்டும்: துணை ஜனாதிபதி

இந்தியர்கள் பாரம்பரியம், கலாச்சாரத்தை பாதுகாக்க வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு கூறினார். புதுடில்லியில் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது: சுப்புலட்சுமி இசை அழியாது, இந்த நாட்டில் எல்லோரும் அவரது இசையால் ஈர்க்கப்பட்டு, மகிழ்ச்சியடைந்தனர் . அவர் பல்வேறு பாடல்களுக்கு தனது குரல் கொடுத்த போது இசை "தெய்வீக பரிமாணத்தை" எட்டியது.

"இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், குடும்ப முறை மற்றும் மதிப்பு முறை உலகம் முழுவதும் பரவலாக பிரபலமாக உள்ளன. பாரம்பரியம், கலாச்சாரம், ஆகியவற்றைப் பாதுகாப்பது நமது கடமையாகும். நமது கடந்தகால மற்றும் பாரம்பரியத்தை நாம் எப்பொழுதும் பெருமையாக உணர வேண்டும், அதை பாதுகாக்க முயற்சி செய்ய வேண்டும். இவ்வாறு கூறினார்.

இரு தமிழர்கள், தெலுங்கர்கள் சந்தித்து கொள்ளும் போது தாய்மொழியை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றனர். அதே நேரத்தில் வெளிநாட்டவர்களிடம் ஆங்கிலத்தில் பேசுவதில் தவறில்லை. அம்மா என்ற வார்த்தை இதயத்தில் இருந்து வருகிறது. மம்மி என்ற ஆங்கில வார்த்தை உதட்டில் இருந்து வருகிறது. இவ்வாறு கூறினார். 

சார்ந்த செய்திகள்