புதுச்சேரியில் மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

Advertisment

PUDUCHERRY CORONAVIRUS INCIDENT

பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வருவதைத் தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன.

இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் மாஹேவில் கரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த மாநிலத்தில் கரோனாவால் 8 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் ஒருவர் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment