Skip to main content

உபி பருக்காபாத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தத்தால் 49 குழந்தைகள் உயிரிழப்பு!

Published on 04/09/2017 | Edited on 04/09/2017
உபி பருக்காபாத்தில் ஆக்சிஜன் சப்ளை நிறுத்தத்தால் 49 குழந்தைகள் உயிரிழப்பு!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பருக்காபாத் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில், ஆக்சிஜன் சப்ளை நிறுத்தத்தால் ஒரே மாதத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம் பருக்காபாத் என்னும் பகுதியில் அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 49 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இவற்றில் பெரும்பாலானவை சமீபத்தில் பிறந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தக் குழந்தைகளின் பெற்றோர் குழந்தைகளின் மரணத்திற்குக் காரணம், ஆக்சிஜன் குறைபாடு தான் எனக் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த சம்பவம் மாவட்ட நீதிபதியின் கவனத்திற்குச் சென்றபின், மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையிலான விசாரணைக் குழுவொன்றை அமைத்தார். இவர்கள் அளித்த அறிக்கை குழப்பானதாகவும், முழுமையடையாமலும் இருந்துள்ளது.

இதையடுத்து, மூத்த மருத்துவ அதிகாரி மற்றும் மூத்த மருத்துவக் கண்காணிப்பாளர் ராம் மனோகர் லோஹியா உள்ளிட்டோர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் ஆக்சிஜனை சரியான நேரத்தில் விநியோகம் செய்யாததும், சரியான நேரத்தில் மருந்துகள் வழங்காததுமே என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதற்கு முன்னர் உபி மாநிலம் கோரக்பூரில் ஆக்சிஜன் சப்ளையால் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 52 குழந்தைகளும் ஆக்சிஜன் சப்ளையில் ஏற்பட்ட குறைபாட்டால் உயிரிழ்ந்தனர். தற்போது மீண்டும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் 49 குழந்தைகள் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சார்ந்த செய்திகள்