அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யாஉள்ளிட்ட பல்வேறு நாடுகளில்தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டு, சிலநாடுகளில்தடுப்பூசிமக்கள் பயன்பாட்டிற்கும் வந்துவிட்டது.
இந்தியாவிலும் தடுப்பூசிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் தடுப்பூசிக்கு அனுமதியளிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் இந்திய அரசுஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய நான்கு மாநிலங்களில் கரோனா தடுப்பூசிசெலுத்துவதற்கானமுன்னோட்டத்தை நடத்தியிருக்கிறது.
இந்நிலையில், தமிழகம் உள்படஇந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் ஜனவரி2ஆம் தேதி கரோனாதடுப்பூசிசெலுத்துவதற்கான முன்னோட்டம் நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதற்கு சிறப்பான முறையில்தயாராகியிருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.