Skip to main content

மாட்டு மூத்திரத்தை இஸ்லாமியர்களும் பயன்படுத்தலாம் - பாபா ராம்தேவ்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
மாட்டு மூத்திரத்தை இஸ்லாமியர்களும் பயன்படுத்தலாம் - பாபா ராம்தேவ்

மாட்டு மூத்திரத்தை தேவைப்பட்டால் மருத்துவ சிகிச்சைகளுக்காக இஸ்லாமியர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம் என பாபா ராம்தேவ் தெரிவித்துள்ளார்.

பதஞ்சலி நிறுவனத்தின் உரிமையாளரும், யோகாகுரு என அழைக்கப்படுபவருமான சர்ச்சைக்குரிய சாமியார் பாபா ராம்தேவ் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசுகையில், ‘மாட்டு முத்திரத்தை மருத்துவச் சிகிச்சைக்காக பயன்படுத்தலாம் என இஸ்லாமியர்களின் புனிதநூலான குர்ஆனில் கூட சொல்லப்பட்டுள்ளது. ஆனால், பலர் பதஞ்சலியை இந்து மதத்திற்கான நிறுவனம் என்று அவதூறு பரப்புகிறார்கள். நான் என்றைக்காவது இஸ்லாமிய சகோதரகளான ஹமீது சகோதரர்களின் ஹம்தார்த் நிறுவனத்தை குறைசொல்லியிருக்கிறேனா? ஹம்தார்த் மற்றும் ஹிமாலயா மருந்துகள் நிறுவனத்திற்கு எனது முழு ஆதரவும் உண்டு. ஃபரூக் பாய் கொடுத்த இடத்தில்தான் எனது யோகா கிராமத்தை நிறுவினேன். குறைசொல்பவர்கள் சொல்லிக்கொண்டுதான் இருக்கிறார்கள்’ எனக் கூறினார்.

தனது ரூ.10ஆயிரம் கோடி சொத்துக்களை யார் நிர்வகிப்பார்கள் என்ற கேள்விக்கு, ‘எனது எண்ணங்கள் எப்போதும் பெரியதாகவே இருக்கும். அடுத்த 100 ஆண்டுகளுக்கு பதஞ்சலி நிறுவனத்தை சிறப்பாக நடத்தவேண்டும். அதற்காக என்னிடம் பயிற்சிபெற்ற 500 சாதுக்கள் கொண்ட குழுவை நிறுவுவேன். அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார்.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்