Skip to main content

சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியை பாராட்டிய பி.வி.ஆச்சாரியா..!

Published on 29/08/2017 | Edited on 29/08/2017
சொத்து குவிப்பு வழக்கு விசாரணை அதிகாரியை
பாராட்டிய பி.வி.ஆச்சாரியா..!



சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை அதிகாரியாக சிறப்பாக செயல்பட்டதாக ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு நல்லம்ம நாயுடுவிற்கு மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

மூத்த வழக்கறிஞரும், ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில், அரசுத் தரப்பு வழக்கறிஞராக வாதாடியவருமானவர் பி.வி.ஆச்சார்யா. இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை வாங்கி குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், விசாரணை அதிகாரியாக செயல்பட்ட ஓய்வுபெற்ற போலீஸ் சூப்பிரண்டு நல்லம்ம நாயுடுவிற்கு தனது பாராட்டுகளை தெரிவித்தார்.



போலீஸ் சூப்பிரண்டு நல்லம்ம நாயுடு குறித்து அவர் அளித்துள்ள பாராட்டு சான்றிதழில் கூறியுள்ளதாவது,

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு பொது வழக்கறிஞராக செயல்பட்ட எனக்கு விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடு நன்கு அறிமுகமானவர். சொத்து குவிப்பு வழக்கில் அவரது விசாரணைகள் முழுமையானதாக மட்டுமல்லாமல் நேர்மையானதாகவும், நியாயமானதாகவும் இருந்தன.

அதிகாரிகள் யாரும் போயஸ் கோட்டைக்குள் போக முடியாது என்ற நம்பிக்கையை தவறாக்கி, தேவையான உத்தரவுகளை சரியான நேரத்தில் பெற்றுக்கொண்டு போயஸ் கார்டனில் அவர் மேற்கொண்ட தேடல்கள் மற்றும் கைப்பற்றல்களே அவரது தொலைநோக்கு பார்வைக்கு ஆதாரமாகும்.

சொத்து குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரியாக நல்லம்ம நாயுடுவின் அசைக்க முடியாத முயற்சி இல்லையெனில், உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கு இறுதிபெற்று தண்டனை வழங்கபட்டிருந்திருக்காது. இவ்வாறு அவர் தன் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

- தாமோதரன் பிரகாஷ்

சார்ந்த செய்திகள்