
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் இளம்பெண் அதே குடியிருப்பில் வசித்து வரும் 16 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சிறுவனின் நடவடிக்கையில் சில மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து அவரது பெற்றோர் சிறுவனிடம் கேட்டுள்ளனர். அப்போது சிறுவன் இளம்பெண் தன்னுடன் உறவில் இருந்ததை தெரித்திருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இளம் பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.