Skip to main content

புதிய ரூ.2000 கள்ளநோட்டுகள் பிடிபட்டதில் குஜராத் முதலிடம்!

Published on 06/09/2017 | Edited on 06/09/2017
புதிய ரூ.2000 கள்ளநோட்டுகள் பிடிபட்டதில் குஜராத் முதலிடம்!

புதிய ரூ.2000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் பிடிபட்டுள்ளன. இதில் 40% பங்கினை குஜராத் மாநிலம் வகிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.



கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ரூ.1000, ரூ.500 நோட்டுகளின் மதிப்பு செல்லாதென பிரதமர் மோடி அறிவித்தார். இதற்கு கறுப்புப்பண ஒழிப்பு, கள்ளநோட்டு ஒழிப்பு, தீவிரவாதிக்களான நிதியில் தடை மற்றும் பணமில்லா பொருளாதாரம் என பல்வேறு காரணங்களை அடுக்கினார் அவர்.

இந்நிலையில், கள்ளநோட்டுகள் குறித்த மத்திய உள்விவகாரத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாடு முழுவதும் பல இடங்களில் புதிய ரூ.2000 கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன என்றும், அதில் குஜராத் மாநிலம் 40% பங்கினை வகிப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை ரூ.66,92,000 மதிப்பிலான புதிய ரூ.2000 நோட்டுகள் பிடிபட்டுள்ளதாகவும், அதில் ரூ.26,42,000 மதிப்பிலான கள்ளநோட்டுகள் குஜராத்தில் பிடிபட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்தில் மட்டும் 1,321 ரூ.2,000 கள்ளநோட்டுகள் பிடிபட்டுள்ளன. நாடு முழுவதும் 64 பேரும், குஜராத்தில் 12 பேரும் கள்ளநோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத்தில் பிடிபட்ட பெரும்பாலான கள்ளநோட்டுகள் அகமதாபாத்தில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் மாடல் என்ற பெயருடன் பிரதமர் பதவியில் அமர்ந்தவர் மோடி. ‘கள்ளநோட்டுகளை ஒழிப்பதற்காக’ என்ற பெயரில் மோடியால் அறிமுகப்படுத்தப்பட்டது பணமதிப்பு இழப்பு நடவடிக்கை. இந்த இரண்டும் வெவ்வேறு தகவல்கள் என்றாலும், ஒப்பிட்டுப்பார்க்காமல் இருக்க முடிவதில்லை.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்