nn

நாடு முழுவதும் ப்ளூ காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதோடு கரோனா பாதிப்பும் அதிகரித்து வருகிறது. இதனை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வந்த நிலையில் அதன் விளைவாக பல்வேறு மாநில அரசுகளுக்கு கடிதங்கள் வாயிலாக முன்னெச்சரிக்கையோடு நடவடிக்கைகள் எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Advertisment

கடந்த 22/3/2023 அன்று பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் சில தினங்களாக கரோனா உறுதி செய்யப்படுவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாக அதிகரித்து வருகிறது.

Advertisment

இன்று (30/03/2023)) காலை நிலவரப்படிஇந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரே நாளில் 2,151- லிருந்து 3,016 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கரோனா பாதித்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 11,903-லிருந்து 13,509 ஆக அதிகரித்துள்ளது. நேற்று சிகிச்சை முடிந்து 1,222 பேர் டிஸ்சார்ஜ் ஆனநிலையில் இன்று 1,396 பேர் குணமடைந்துள்ளனர் எனமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.