jio

Advertisment

ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு துறையில் இந்திய அளவில் முன்னணியில் உள்ளது. போட்டி நிறுவங்கள் ஜியோவிற்கு ஈடுகொடுக்க முடியாமல் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. ஏற்கனவே ஏர்செல் நிறுவனம் மூடப்பட்ட நிலையில், ஐடியாவும் வோடபோனும் இணைந்து செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏர்டெல் நிறுவனமும் ஐடியா, வோடபோன் நிறுவனங்களுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஜியோவை ஈடுகட்டும் நடவடிக்கையாக மூன்று நிறுவனங்களும் தங்கள் டவர்கள் அமைத்தல், மற்றும் ஆப்டிகல் ஃபைபர் திட்டங்களில் இணைந்து செயல்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.