Skip to main content

ஆதார் இணைக்கும் மையங்களை அமைக்காத வங்கிகளுக்கு ரூ.20ஆயிரம் அபராதம்!

Published on 05/09/2017 | Edited on 05/09/2017
ஆதார் இணைக்கும் மையங்களை அமைக்காத வங்கிகளுக்கு ரூ.20ஆயிரம் அபராதம்!

வரும் செப்டம்பர் 30க்குள், ஆதார் இணைக்கும் மற்றும் தகவல் சேர்க்கும் மையங்களை அமைக்காத வங்கிகளுக்கு ரூ.20,000 அபராதம் விதிக்கப்படும் என இந்திய தனிமனித அடையாளத்திற்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலை மாதம் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த வங்கிகளின் 10% கிளைகளில், ஆதார் இணைக்கும் மையங்களை அமைக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு அரசு மற்றும் தனியார் வங்கிகளுக்கு பொருந்தும். அதாவது ஒவ்வொரு வங்கியும் அதனதன் கிளைகளில் பத்தில் ஒரு கிளையில் இந்த மையம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், வங்கிக்கூட்டமைப்புகள் கால அவகாசத்தை நீட்டிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தன. எனவே, செப்டம்பர் 30 வரை கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டது. இந்த கால அவகாசத்திலும் ஆதார் இணைக்கும் மையங்களை உருவாக்காத வங்கிகள் கிளை ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள 1 லட்சத்து 20 ஆயிரம் வங்கி கிளைகளில், 12ஆயிரம் கிளைகளில் இந்த ஆதார் இணைக்கும் மையங்கள் அமைக்க வேண்டுமெனவும் இந்திய தனிமனித அடையாளத்திற்கான ஆணையம் தெரிவித்துள்ளது.

ரூ.50ஆயிரத்திற்கு மேல் வங்கியில் செலுத்துபவர்கள் ஆதார் எண்ணைக் காண்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்