கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதில் எந்த ஒரு சிறப்பம்சமும் இல்லை என்று எதிர்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில் ராகுல்காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடியின் பழைய உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்டு, அந்த வீடியோவை பொருளாதாரத்துடன் தொடர்புபடுத்தி கலாய்த்துள்ளார்.

Advertisment

rahul tweet about pm modi

அந்த பதிவில் "அன்புள்ள பிரதமர், தயவு செய்து உங்கள் மேஜிக் உடற்பயிற்சியை இன்னும் சில முறை செய்யுங்கள். இதனால் பொருளாதாரம் வலுப்படக்கூடும்" என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டும் இல்லாமல் #modinomics என்ற ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

Advertisment

இந்த டிவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இதனை காங்கிரஸ் கட்சியினர் பலரும் ரீட்வீட் செய்துவரும் நிலையில் பாஜக-வினர் இந்த பதிவிற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.