Skip to main content

பத்து தலை ராவணனுக்கு ஆதார் வழங்க முடியாது - ஆதார் ஆணையம் தகவல்

Published on 01/10/2017 | Edited on 01/10/2017
பத்து தலை ராவணனுக்கு ஆதார் வழங்க முடியாது - ஆதார் ஆணையம் தகவல்

கடந்த சனிக்கிழமை வடமாநிலங்களில் தசரா விழா கொண்டாடப்பட்டது. இதுகுறித்து இந்திய தனி மனித அடையாளத்திற்கான ஆணையம் தனது ஆதார் என்ற பெயர்கொண்ட ட்விட்டர் பக்கத்தில், பத்து அம்புகள் ராவணனின் தலையைக் குறிவைத்து இருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு, நல்லரசை உலகம் கவனித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஆதாரின் பெருமையைக் கொண்டாடுவோம் என பதிவிடப்பட்டிருந்தது.

அப்போது, #DestroyTheAadhaar என்ற பெயரைக் கொண்ட ட்விட்டர் கணக்கின் வழியாக, ‘ராவணனுக்கு பத்து தலைகள், பத்து ஜோடி கண்கள் இருக்கின்ற ன. அப்படியானால் குறைந்தது 100 ஆதார் அட்டைகளாவது ராவணனுக்கு வழங்குவீர்களா? என கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆதார் ட்விட்டர் பக்கம், ராவணன் இந்தியர் அல்லாதவர் என்பதால் அவருக்கு ஆதார் வழங்க முடியாது என பதிலளித்திருந்தனர். இந்த பதில் அனைத்து தரப்பிலும் ஆதரவினைப் பெற்றது. 



- ச.ப.மதிவாணன்

சார்ந்த செய்திகள்