கடந்த ஒரு மாத கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நிலச்சரிவாலும் பதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து, மீட்பு விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் கேரளாவில் ஏற்பட்டிற்கும் பாதிப்புகளுக்கு நிவாரண பொருட்கள், நிதிகள் தருகின்றனர். அதேபோல பல அரசியல் தலைவர்களும், பிற மாநில அரசாங்கமும் நிதி உதவி செய்துவருகிறது.

Advertisment

Advertisment

இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.