Skip to main content

முதல் கணபதி யார்? ஆதாரங்களுடன் விவரிக்கிறார் முன்னால் காப்பாட்சியர் ராஜா முகமது

Published on 25/08/2017 | Edited on 25/08/2017
முதல் கணபதி யார்? ஆதாரங்களுடன் விவரிக்கிறார் முன்னால் காப்பாட்சியர் ராஜா முகமது

விநாயகர் சதுர்த்தி பரபரப்புகளில் இருக்கிறது இந்தியா. பல இடங்களில் பதைபதைப்பில் இருக்கிறார்கள் மக்கள். இந்த நிலையில் கணபதி பற்றியும், கணபதி வருகையும் ஊர்வலங்கள் பற்றியும் புதுக்கோட்டை அருங்காட்சியக முன்னால் காப்பாட்சியர் டாக்டர் ராஜா முகமது வரலாற்று ஆய்வாளர் தமிழ்நாடு அரசு மதநல்லிணக்க விருதாளர் -2012. அவர்கள் ஆதாரங்களுடன், படங்களுடன் விவரிக்கிறார்.
 
கணபதியே....கணபதியே.... சில சிந்தனைகள்

இன்று கடைவீதிக்கு சென்ற போது மண்ணில் செய்த பழைய பாணி கணபதி சிலைகளை விற்பனை செய்வதற்கு வைக்கப்பட்டிருந்தன. வீட்டுக்கு வந்து ஆய்வுக்குறிப்புகளை புறட்டினேன். எத்தனை எத்தனை  கணபதி வடிவங்கள். லேட்டஸ்ட் ஜல்லிக்கட்டு விநாயகர். ஆனால் இங்கு நிற்பவர்தான் தமிழ் நாட்டிற்கு முதன்முதலில் வந்த வாதாபி கணபதி.



கி.பி.6-ம் நூற்றாண்டு கலையம்சம். தமிழ் நாட்டை ஆண்ட நரசிம்மவர்ம பல்லவன் (கி.பி.630-668) கன்னட நாட்டு ஹோய்சல மன்னர் புலிகேசியை அவனது தலைநகர் வாதாபியில் வென்றதனால் வெற்றிச்சின்னமாக இங்கு வந்தவர் கணபதி. இவர்தான் வாதாபி கணபதி. இதனைக் கண்டு வியந்து இங்கு கொண்டுவந்த நரசிம்ம வர்மனின் படைத்தளபதி பரஞ்சோதி எனும் சிருத்தொண்டநாயனார் தனது ஊரான திருச்செங்காட்டங்குடி சிவன் கோவில் பிரதிஷ்டை செய்தார்.



இதுதான் தமிழ் நாட்டின் முதல் கணபதி. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற தலம். வாதாபியில் உள்ள குடைவரைக்கோவிலில் நடராஜர் தாண்டவ சிற்ப தொகுதியில் இந்த கணபதி நிற்பதைக்காணலாம். கணபதி உருவம் இங்குதான் முதன்முதலில் கிடைக்கிறது. கால ஓட்டத்தில் பல மாறுபட்ட உருவங்களும் புராணக்கதைகளும் தோன்றின.



கணபதி சிவபெருமானின் மூத்த மகன் ஆனார். தமிழ் நாட்டில் பிரமச்சாரி. வட இந்தியாவில் இரண்டு மனைவியருடன். சுசீந்திரம் கோவிலில் பெண் உருவம் -விநாயகி.  ஆதியில் விழாவிற்கு மண்ணால் செய்த கணபதி வழிபாட்டுக்கு பின் காலில்பட்டு வழு -குற்றம் நேராமல் இருக்க அதனை நீர்நிலைகளில் விடும் பழக்கம் ஏற்பட்டது.

ஏன் விநாயகர் ஊர்வலம்?

சுதந்திரப் போராட்ட காலத்தில் 1920களில் ஏனோ தானோன்னு இருந்த மக்களை ஒன்று திரட்ட காங்கிரஸ் தலைவர் திலகர் விநாயகசதுர்த்தி ஊர்வலத்தை தொடங்கினார். ஆனால் இது ஒரு மாறுபட்ட மாயையை உருவாக்கி விட்டது. அன்றிலிருந்து பிரச்சினை தான். எத்தனையோ பண்டிகைகள் அமைதியாக மகிழ்ச்சியுடன் நடைபெறும்போது கணபதின் பெயரால் ஏன் இந்த பரபரப்பு. இது இந்த நாட்டில் மதநல்லிணக்கத்தை பாதிக்கும் ஒரு கருவியானது ஏன்? மதங்களை கடந்து மனிதநேயத்தை நிலை நிறுத்த அனைவரும் இந்த நாளில் சிந்திப்போம் என்கிறார்.
    
- இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்